டி.ஆரு தேர்தலில் போட்டியிட நீ யாரு

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட கடும் எதிர்ப்புக் எழுந்துள்ளது-  இது குறித்து  தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையிலானஅணியின் சார்பில் தேர்தல்அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகாரில் வேறொரு அமைப்பில் தலைவராக பொறுப்பு வகிக்கும் டி.ராஜேந்தர், கௌரவ செயலாளராக -  உள்ள  மன்னன், பொருளாளராக - கே.ராஜன் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளது சங்க விதிமீறல் எனவே டி.ஆர் தரப்புவேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கோரவுள்ளனர்


இதற்கிடையே சென்னை காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்க முக்கிய உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகளும் டி.ஆர் அணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் இதன் தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன