கடித்து குதறும் வெறிநாய்கள்

திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய் ஒன்று வெறியாட்டம் போட்டு வருகிறது.இதுவரை 20 க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியிருக்கிறது  பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் நாளை தாங்கல் பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மற்றவர்களும் வெறிநாய் கடியில் இருந்து தப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


கவர்னர் வெளியேற கோரிக்கை


அரசமைப்புசட்டப்படி 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


மதுரை எம்.பிக்குகொரோனா


மதுரைநாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான வெங்கடேஷனும்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதலுக்கு ஆளானார்.இதைத்தொடர்ந்து மதுரை தோப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


புறநகர் மின்சார ரயில்களை இயக்க உத்தரவிட வேண்டும் என மத்திய ரயில்வே துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்


ரேஷன் கடைகளில் வெங்காயம்


வெங்காயத்தின் விலை ஏற்றத்தை தொடர்ந்து பசுமை பண்ணை கடைகளில் கிலோ ஒன்றுக்கு 45ரூபாய்க்கு விற்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்துள்ளார்.இதற்கிடையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான் என்றும் வெளிமார்க்கெட்டில் வெங்காயம் விலையை உயராமல் தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில்  வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்