சீனாவின் வூகான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா நோய்த்தொற்று உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா எங்கிருந்து பரவியது திட்டமிட்டு பரப்பப்பட்டதா என்று தீவிர சர்ச்சைகள் எழுந்த வண்ணமிருக்கின்றன இந்த நிலையில் பென்சில்வேனியாவை சேர்ந்த நுண்ணுயிரியல் பேராசிரியர் சூசன் என்பவர் கொரோனா நோய்த்தொற்று மனிதர்களால் ஆய்வகங்களில் இருந்து செயற்கை யாக உருவாக்கப்பட்டதல்ல.இயற்கையாக பரவியது தான் என்றும் நுண்ணுயிர் நோய்த்தொற்றை மனிதர்களால் உருவாக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அறிவார்ந்த விவாதங்களுக்கு இடையே நோய்த்தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 10ஆயிரம் பேரை கொரோனா காவு வாங்கியிருக்கிறது. தினமும் 5 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று பரவி வருகிறது.சென்னையில் மட்டும் நாள்தோறும் 1200 பேருக்கு குறையாமல் நெருங்கி கொண்டிருக்கிறது. தமிழக அரசும் நோய் பரவலை தடுக்க தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்திய வண்ணம் இருக்கிறது.சென்னை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் , கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர் அவர்களுக்கு துணையாக போலீஸ் அதிகாரிகளும் அமர்த்தப்பட்டனர் . அதிகாரிகளின் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதமாக செயல்படுத்த சென்னைக்கு பிரத்யேகமாக 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். நோய்த்தொற்று தடுப்பு பணிகள் வெகுவேகமாக நடந்தன.தகவல்களும் ஒரளவு தெரிந்தன. ழறமக்களிடையே விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நோய்த்தொற்று தீரும் என்ற நம்பிக்கை பிறந்தது .
ஊரடங்கு பெருமளவில் தளர்த்தப்பட்ட பின்னர் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் எங்கே கண்காணிக்கிறார்களா என்பது தெரியவில்லை ஆய்வு செய்ய அமர்த்த அமைச்சர்களும் வருவதில்லை மீண்டும் ஜரூருராக பணிகள் நடக்க வேண்டும் அமைச்சர்கள் தங்களது ஆய்வுப் பணிகளை வேகமாக தொடர வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.