முதலமைச்சர் எடப்பாடிக்கு ஸ்டாலின் ஆறுதல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயி அம்மாள் மாரடைப்பு காரணமாக சேலத்தில் நேற்றிரவு காலமானார்.   அவருக்கு வயது 93 சொந்த ஊரான சிலுவைபாளையத்தில் அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் உடலை பார்த்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்ணீர் விட்டு கதறியழுதார்.முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஸ்டாலின்இரங்கலும்ஆறுதலும் கூறியதாக திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கொங்கு மக்கள் தேசிய கட்சியின்  தலைவர்  ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்