முத்தையா முரளிதரனாக நடிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்
லட்சக்கணக்கானதமிழர்களை கொன்று குவித்து இலங்கையில் போர் முடிந்து விட்டது என்று ராஜபக்சே அறிவித்த போது இந்த நாள் இனிய நாள் என்று கூறியவர் முத்தையா முரளிதரன். தங்களின் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை காணவில்லை என்று ஈழத்து தாய்மார்கள் துடித்தபோது நாடகம் என்று பரிகாசம் செய்தவர். பிறப்பால் தமிழனாக வளர்ப்பால் சிங்களவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிய முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து நடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்
வெற்றி வேல் மரணம்
சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வெற்றிவேல் காலமானார்.கொரோனா நோய்த்தொற்று காரணமாக தனியார் மருத்துமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வெற்றிவேல் நேற்று இரவு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்