கொரோனாவிலும் கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் கொரோனா கொடுமையாக தாண்டவமாடினாலும் ஆளுங்கட்சியின் கொண்டாட்டத்திற்கு குறைவேதும் இல்லை. அதிமுகவின் 49வது தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. வழியெங்கும் செண்டை மேளம் தப்பாட்டம் புலியாட்டம் போட்டும் பெண்கள் பூரண கும்ப மரியாதையோடுதுணைமுதலமைச்சரும் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பளித்தனர் ஷ


இன்னொரு பக்கம் தாயார் தவுசாயிம்மாள் மறைந்த துக்கத்தில் இருந்த முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த ஊரான சிலுவையம் பாளையத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மேடையில் அதிமுகவின் 49வது தொடக்க விழா கொடியேற்றி சிறப்பித்தார் 


இதற்கிடையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தி.நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியேற்றினார்