சிறுவர்களோடு கேரம் விளையாடிய அமைச்சர்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தனது  ராயபுரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்து செல்லும் போது சிறுவர்கள் சிலர் கேரம்போர்டு ஆடுவதை பார்த்தார். ஏற்கேரம் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அமைச்சர் உடனே சிறுவர்களோடு சென்று அவர்களுக்கு இணையாக அமர்ந்து கொண்டு கேரம் விளையாடத் தொடங்கி விட்டார்.


 


 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கேரம் ஆடியதால் அவரால் எளிதாக காயினை போட முடியவில்லை. ஐந்தாவது முயற்சியில் தான் நாணயத்தை கேரம் பாக்கெட்டில் போட்டார்.அமைச்சர் தங்களோடு கேரம் விளையாடியதை பார்த்து சிறுவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..அப்போது அந்த சிறுவர்களை பார்த்து அமைச்சர் ,மூன்று நான்கு முறை முயற்சி செய்தும் என்னால் காயினை போடமுடியவில்லை, ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன்.


 


இதே போல நீங்களும் எந்த விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் சிறுவர்கள் அமைச்சரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சிறுவர்களிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்!