திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும்- அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும், நாட்டில் எழுந்துள்ள எதிர்வினை அலைகளை ஒட்டி, நான்அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் மத்தியிலேயே , அமோக ஆதரவு திரண்டு வருவதைத் தெரிந்து கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு, “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்றுதான் இந்த “மிரட்டல்” முயற்சிகளில் எல்லாம் இறங்கியது. ஆனால் தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, எங்கே அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களும் - கட்சி சார்பற்ற முறையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று பழனிசாமிக்கு கிடைத்த கடைசித் தகவல் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆகவேதான் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் பழனிசாமியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
திட்டமிட்டபடி - கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் - திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும், கிராம மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.வேளாண் சட்டங்களை ஆதரித்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி - விவசாயிகளை வஞ்சக நாடகத்தை”, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் சிறப்பான கடமையை நிறைவேற்றவேண்டும் என்று திமுக உள்ளாட்சிதலைவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்