திருவொற்றியூர் மண்டலம் மணலி எண்ணூர் விரைவு சாலையில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான கால்வாய் 1வாரத்தில் அமைக்கப்படும் என்று அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தெரிவித்தார்
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குப்பன் கூறுகையில்
திருவொற்றியூர் மண்டலம் மணலி எண்ணூர் விரைவு சாலையில் மழைநீரை வெளியேற்றி புதிய கால்வாய் அமைப்பதற்கான பணிகள் வெகுவேகமாக நடக்கின்றன.ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதற்குரிய நிதியை வழங்கும் என்று எதிர்பார்த்தோம்.ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாமதப்படுத்தி வரும் சூழ்நிலையில் . எந்த நிதியையும் எதிர்ப்பார்க்காமல் மாநகராட்சியு ரூ 15லட்சம் மதிப்பீட்டில் வெள்ளநீர் வெளியேற்ற கால்வாயை அமைக்க இருக்கிறது .இந்த பணி ஒருவாரத்தில் நிறைவடையும்இவ்வாறு அவர் கூறினர்
முன்னதாக திருவொற்றியூர் மண்டலத்தில் மழை நீரில் மிதக்கும் பல்வேறு பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று குப்பன் ஆய்வு செய்தார்