வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை கிண்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தை கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார்.சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுசெயலாளர் மு.சம்பத் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் பா . கருணாநிதி ஆகியோரும் தண்டையார்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மூர்த்தியும் தலைமை தாங்கினர். சாலை மறியலில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்
இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கட்சியினருக்கு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் யாரும் கவலைப்படவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன் என்று நம்பிக்கையளித்துள்ளார்.