பெண்களுக்கு இடம் எங்கே

அதிமுக வில் எதிர்பார்த்தபடியே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். விடிய விடிய பேசி வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதில்  அமைச்சர் செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இல்லை  என்றும் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்றும் ஏகப்பட்ட இல்லைகள் இவை எல்லாவற்றையும் விட அதிமுகவில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போற்றி வந்த தாய்க்குலத்திற்கு இடமில்லை என்பது அக்கட்சியின் தாய்க்குலத்திற்கு மட்டுமல்ல  பெரும்பாலானோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்களை அழைத்து  வருவதற்கும் டான்ஸ் ஆடுவதற்கும் கோஷம் போட மட்டும்தான் நாங்களா  வழிகாட்டுதல் குழுவில்இல்லையாஎன்று தலைவர்கள் காதுபடவே தங்களது குமுறல்களை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் அதிமுகமகளிர் அணியினர்