எம்எல்ஏவின் கலாட்டா கல்யாணம்


கள்ளக்குறிச்சியை சேர்ந்த தலித் சட்டமன்ற உறுப்பினர் பிரபு பிராமண பெண் சவுதர்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதற்கு சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது மகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார், அந்த வழக்கில்சவுந்தர்யாவை நீதிமன்ற்த்தில் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது இதற்கிடையில் சட்டமன்ற உறுப்பினர் பிரபு , நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு நாளை தனது மனைவி சவுந்தர்யா ஆஜராவார் என்றும் உண்மைகளை விளக்கி கூறுவார் என்றும் அறிவித்துள்ளார், இந்த நிலையில் தனது மாமனாரின் அறியாமையை பயன்படுத்தி அவரை சிலர் துாண்டியிருப்பதாகவும் குடும்ப பிரச்னையில் அரசியல் செய்வது அநாகரீகம் என்று எதிர்த்தரப்பினரை பிரபு எம்எல்ஏ கடுமையாக தாக்கியுள்ளார், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் மும்முரமாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் , துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த திருமணத்திற்கு இதுவரை வாழ்த்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


நோய்த்தொற்றுக்கு பலி 10 000


தமிழகத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 88 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்ப்டடுள்ளனர் சென்னையில் மட்டும் கொரோனா நோய்த்தொற்றால் 1295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,


சத்துணவு நியமனம் நிறுத்தம்


கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சத்துணவு பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக சமூகநலத்துறை அறிவித்துள்ளது,


காங்கிரஸ் மாநாடு


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 11 ம்தேதி திருவண்ணாமலையில் காங்கிரஸ் மாநாட்டு நடத்த இருப்பதாகவும் அதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்க இருப்பதாகவும் காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்,


200 பேருக்கு கோவிட் 19+


தலைமை செயலக பணியாளர்கள் 200 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலால் அவதிபடுவதால் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயங்கள் உள்ளது


எனவே மத்திய அரசின் விதிமுறைகள் அடிப்படையில் 50 சதவீத பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தலைமை செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது


 


சென்னை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன் இன்று தனது 56 வது பிறந்தநாளை  கொரோனா நோய்‌ தொற்று பரவல் காரணமாாாான


மிகவும் எளிமையாக கொண்டாடினார் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்


 


கடலுாரில் தந்தை பெரியார் சிலை முன்பு நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மூன்று காவல்துறையினர் அதிரடி மாற்றம்யபய்்


தமிழக அரசுக்கு மதிமுக- திராவிடர் கழகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்,


 


 சலூன்கள் அடைப்பு


தமிழகம்முழுவதும்  இன்று சலுான் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது, திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய இளைஞரை விடுதலையானதைத்தொடர்ந்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,


அ.மா சாமி மரணம்


தினத்தந்தி, ராணி, மற்றும் ராணி முத்து ஆகியவற்றில் 44 ஆண்டுக்காலம் ஆசிரியராக பணியாற்றிய அ.மாரிசாமி என்கிற அ,மா,சாமி காலமானார் 


குஷ்பு வாழ்த்து


முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்


நடுவானில் குவா ..குவா 


பெங்களுருவில் இருந்து சொந்த வேலையாக இண்டிகோ விமானத்தில் டெல்லி செனற  ஒரு இளம்பெண் திடீரென பிரசவ வலியால் அலறி துடித்தார். நடுவானில் அவர் கூக்குரல் சத்தத்தை கேட்டு விமான பணிப்பெண்கள்.அதே விமானத்தில் பயணத்தில் இருந்த டாக்டர் சைலஜாவின் உதவியை நாடினர்.சிறிது நேரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் சைலஜாவுக்கு  பாராட்டுக்கள் குவிந்தது