ஒரு வழியாக கையெழுத்திட்டார் கவர்னர்

பற்றியெறிந்த போராட்டங்களிடையே மெளனம் காத்த கவர்னர் பன்வாரிலால் புரோகிதர் கடைசியில் ஒருவழியாகழியாழியழிழ7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு கையெழுத்து போட்டு ஒப்புதல் அளித்தார்.


நீட் விவகாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து தமிழக சட்டபேரவையில் ஏகமனதாக நிறைவேற்றியது தமிழக அரசு. 45 நாட்களுக்கு மேலாக இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக கவர்னர் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உயர்நீதிமன்ற த்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு பள்ளி மாணவர்கள் நிலையை எண்ணி நீதியரசர் கண்ணீர் வடித்தார். திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டங்கள் நடத்தின.இதில் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற லெவலில் கவர்னருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.


இந்த நிலையில் ஆளுநர் ஒப்புதலின்றி  7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.இந்த சட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் மசோதா குறித்து 4 வாரங்களில் பரிசீலனை செய்வதாக கவர்னர் அறிவித்திருந்தார்.விரைவில் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டிய சூழ்நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு ஏற்படாதவரை  கவுன்சிலிங் அறிவிக்கப்போவதில்லை என்று தமிழக அரசு வைத்த செக் அரசியல் கட்சிகள் தந்த கடும் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக கவர்னர் கடைசியாக சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.இதன்காரணமாக 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன


இந்த ஆண்டே அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5 சதவீத ஒதுக்கீடு கிடைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து கவர்னர் பன்வாரிலாலுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நன்றி தெரிவிக்கும் தெரிவித்துள்ளார் இதற்கிடையில் இந்த சட்டம் செல்லுபடியாகுமா எவரேனும் வழக்கு தொடர்ந்தால் வழக்கு நிற்குமா என்ற புதிய கேள்விகளை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார்