சலூன்கள் அடைப்பு ஏன்
திண்டுக்கல்லில் முடி திருத்த ஊழியர்ஒருவரின் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டார்.இவ்வழக்கில் தொடர்புடைய நபரை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் பிணையில் விடுவித்ததை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 1லட்சத்திற்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டன சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.இந்நிலையில் இவ்வழக்கில் கைதான நபரை விடுவித்ததுதொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து ஆராயப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சரண்முகம் அறிவித்துள்ளார்
ஜெ வழக்கில் அப்பல்லோ புகார்
ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக அப்பல்லோ மருத்துவமனை குற்றம் சாட்டியுள்ளது.மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்கள் தான் ஆராய முடியும் என்றும் ஆணையம் ஆராய முடியாது என்று மருத்துவ மனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
தபால்காரர்கள் மரணம்
தமிழகத்தில் அயராத பணியின் காரணமாக 700 தபால் காரர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் 15தபால்காரர்கள் நோய்த்தொற்று காரணமாக உயிழந்துள்ளதாகவும் தபால்துறை அறிவித்துள்ளது
மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ்2அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வெழுதிய பள்ளிகளில் வரும் 14ம்தேதி பெற்று கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது
திமுகவில் அதிமுக பிரமுகர்
வடசென்னைதுறைமுகம் தொகுதி அதிமுக முன்னாள் செயலாளரும் ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கியின் இயக்குநருமான எம்.வி.ஆர் சரவணக்குமார் அதிமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்
முதலமைச்சர் எடப்பாடி சுற்றுப்பயணம்
முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி வரும் 13 மற்றும் 14தேதிகளில் தூத்துக்குடி.கன்னியாகுமரி மற்றும்விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்
பரோட்டா சூரி ஏமாந்த கதை
நடிகர் பரோட்டா சூரி ஒய்வு பெற்ற டிஜிபி ரமேஷ்குடவாலா மற்றும் அவரது மகன் விஷ்ணு விஷால் ஆகியோர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.தன்னை வீர தீர செயல் என்ற படத்தில் நடிக்க ரூ 40லட்சம் வரை பேசி ஒப்பந்தம் செய்ததாகவும் பேசிய தொகையை வழங்காமல் அதற்கு பதிலாக நிலம் வழங்குவதாக கூறி அதற்கு பத்திரப்பதிவுக்கு இரண்டரை கோடி வரை வசூலித்ததாக நடிகர் சூரி புகார் கூறியுள்ளார்
தற்போது மேற்கண்ட நிலத்திற்கும் உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தான் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி குடவாலா மற்றும் அவரது மகன் விஷ்ணு விஷால் ஆகியோர் மூலம் ஏமாற்றப்பட்டதாக சூரி குற்றம்சாட்டியுள்ளார்
முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா அண்டு கோவின் வீரதீர செயல் குறித்து ஒஅடையார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . ஆனால் சூரி புகாரை குடவாலா மறுத்துள்ளார்.போலீசார் விசாரிக்கும் நிலையில் அதுபற்றி தான் பேச விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்
இதற்கிடையில் சூரியின் புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் மற்றவர்களை ஏமாற்றி வாழும் வகையில் ஆண்டவன் எங்களை வைக்கவில்லை.காவல்துறை விசாரணைக்கு காத்திருப்பபோம் என்று தெரிவித்துள்ளார்.உண்மையில் ஏமாற்றியது யார் ஏமாந்தது யார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிந்து விடும்.அந்த விசாரணை விரைவாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாபு