கட்சி மாறியவர்களுக்கு திமுகவில் பதவி

   


டாக்டர் ஓபிஎஸ்


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார், அவர் பயணம் சென்று திரும்பிய சில நாட்களில்  துணைமுதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவுக்கு சென்று தொழில்முதலீடுகளை ஈர்த்து வந்தார், அதன் பின்னர்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில்    எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது,. இப்போது துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு டாக்டர் பட்டம் வழங்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடக்கின்றன, 


 


கட்சி மாறியவர்களுக்கு பதவி 
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.பி டாக்டர் லட்சுமணனுக்கு திமுக இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜவில் திமுகவுக்கு கட்சி மாறிய வேதாரண்யத்தை சேர்ந்த எஸ்.கே.வேதரத்தினத்திற்கு  விவசாய அணி இணை செயலாளர் பொறுப்பும் முன்னாள் அமைச்சர் எ,வ.வேலுவின் மகன் டாக்டர் எ.வ,வே கம்பனுக்கு திமுக மருத்துவ அணி துணைத்தலைவர் பதவியும்  வழங்கப்பட்டுள்ளது 


சென்னையில் தங்கியிருக்க அமைச்சர்களுக்கு உத்தரவு 


வரும் 7 ம்தேதி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவிப்பார்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார், இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வரும் 6 ம்தேதி சென்னைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின,  அப்படியொரு அழைப்பு கட்சித்தலைமையிடமிருந்து வரவே இல்லை என்று அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் மறுக்கின்றனர் இருந்தும் யாரிடமிருந்து அத்தகைய அழைப்பு வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதிமுகவின் டுவிட்டரில்  வெளியிடப்பட்ட இந்த அழைப்பு நேற்று காலை  திடீரென அகற்றப்பட்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி பல்வேறு  கேள்விகள் எழுந்த நிலையில்  ,துணைமுதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபன்னீர்செல்வம் சத்தமில்லாமல்  தனது சொந்த மாவட்டமான தேனிக்கு  புறப்பட்டு சென்றார், இதற்கிடையில் இன்று அமைச்சர்களுக்கு திடீர் உத்தரவு பறந்தததாக கூறப்படுகிறது, வரும் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் சென்னையிலேயே தங்கியிருக்கும்படி அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதிமுக தலைமையிடமிருந்து எப்படி திடீர் உத்தரவுகள் பிறப்பிக்க்பபடுகின்றன என்பது தான் யாருக்கும் தெரியவில்லை 


உள்நோக்கம் இல்லை


அதிமுக அலுவலகத்தில் அதன் செயற்குழு கூட்டம் தனிமனித இடைவெளியுடன் தான் நடைபெற்றது என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகவே கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார் அதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று அவர் கூறினார் இதற்கிடையில்  கிராம சபை கூட்டங்களை  ரத்து செய்திருப்பதற்கு பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில் பாதுகாப்புடன் கூட்டம் நடத்தலாம் என்று அவர்  கருத்து தெரிவித்துள்ளார்


 


பாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி


உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம்  செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் கொந்தளித்துள்ளது. வடசென்னை மாவட்டத்தில் இருந்து போராட்டம் வெடித்தது. பாரிமுனையில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள்  நுாற்றுக்கணக்கில்  பாஜக அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு சென்றனர், அவர்களை வழிமறித்து போலீசார் கைது செய்தனர்,