ஐஏஎஸ் ராஜினாமா தந்த அதிர்ச்சி

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமான நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 


கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறை நான்காவது நாளாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு காரணமாக பையா கவுண்டருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து பையா கவுண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக உள்ள சகாயம் மூன்றாண்டுகள் பதவிகாலம்கூடுதலாக இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.ஏற்கனவே சகாயம் பெயரால் அவரது ஆதரவாளர்கள் நடத்தி வரும் மக்கள் பாதை இயக்கம் தற்போது தீவிரம் காட்டி வரும் நிலையில் சகாயம் விருப்ப ஓய்வு கோரியிருப்பது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.மேலும்  நடிகர் ரஜினிகாந்த்் தனது எதிர்கால அரசியலுக்கு  சகாயத்தை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு  இருப்பதாக சகாயம் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்


சென்னை கீரின்வேஸ் சாலையில் சின்னசாமி  தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டிருப்பது பெரும்பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் அதிமுக பிரமுகர் ஒருவர் பெற்ற கையூட்டே தற்கொலை முயற்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலில் யானை மிதித்து உயிரிழந்த பாகன் காளிதாஸ் குடும்பத்திற்கு அத்தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் ரூ 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.செவிலியர் பட்டயப்படிப்பு படித்துள்ள பாகனின்மனைவி ரேவதிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


சட்டமன்ற த்தேர்தலுக்காக திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர் .பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வரும் நவம்பர் 3ம்தேதி முதல்  24மாவட்டங்களில் மக்கள் கருத்தரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்க கொங்கு மண்டலத்தில் இருந்து தனது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது