உத்திர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்து படுபயங்கரமாக படு கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீீீதி கேட்டு ஒளியேந்தி திமுக மகளிர் அணி பேரணி நடத்தப்படும் என்று கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் இன்று மாலை திமுக மகளிர் பேரணி நடைபெறுகிறது தமிழகத்தில் ஊரடங்கு வரும் அக் 31 வரை நீடிக்கிறது எனவே திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமையில் நடைபெற இருக்கும் இந்த ஊர்வலத்திற்கு அனுமதியளிப்பதற்கு வாய்ப்பில்லை தடை மீறும் பட்சத்தில் கனிமொழி உள்ளிட்ட திமுக மகளிர் அணியினர் கைதாகவே வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதற்கிடையில் இன்று மாலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரி லாலை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதாகிறார் கனிமொழி