முதல்வர் வேட்பாளரின் முதல் அதிரடி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவியில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்  ராயபுரம் திருவிக நகர் தொகுதிகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் புதிய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஏற்கனவே அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார் தற்போது கூடுதலாக மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


தற்போது தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள நா.பாலகங்காஎழும்பூர் (தனித்தொகுதி) துறைமுகம் தொகுதிகளை கொண்ட வடசென்னை தெற்கு (மேற்கு )மாவட்டசெயலாளராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி அடங்கிய தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக  ஆதிராஜாராமும் தி.நகர் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளை கொண்ட தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்திற்கு தி.நகர் சத்யா மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்


தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டமாக மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகளை இணைத்து அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ எமக்கே அசோக் மாவட்ட செயலாளராகவும் விருகம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளை கொண்ட தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக விருகை வி.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக  எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியான முதல் பட்டியல் இதுவாகும்