எல்விபி வங்கியின் வீழ்ச்சிக்கு யார் காரணம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லையில்லாத கடன்களே லட்சுமி விலாஸ் வங்கியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்


இந்தியவங்கி ஊழியர் சம்மேளனத்தின்பொதுச் செயலாளர் என்.ராஜகோபால் வெளியிட்ட அறிக்கை


தமிழகம் உள்பட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் பல பகுதிகளில் 94 வருடங்களாக செயல்பட்டு வரும் லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து  வரும் டிசம்பர் 16ம் தேதி வரை அதிகபட்சமாக ரூ.25,000-க்கும் மேல் பணம் எடுக்க முடியாது. லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை தலைமையமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


கடந்த 3 ஆண்டுகளாகவே லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடும் மற்றும் நிதிநிலைமையும் திருப்திகரமாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரைமுறையற்று கடன் வழங்கியதும், அதை கறாராக வசூலிக்க தவறியதும்தான் இந்த வங்கியின் சீரழிவுக்கு முக்கியமான காரணமாகும். இதன் காரணமாக வங்கியிலுள்ள பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


 33 கிளைகளுடன் இயங்கிவரும் டிபிஎஸ் வங்கி, எல்விபி வங்கியை எடுத்துக் கொள்வதால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படாது. சுமார் 60% கிளைகளை கிராமப்புறத்திலும், சிறு நகரங்களிலும் கொண்டுள்ள எல்விபி வங்கியின் கிளைகள் பெருமளவு மூடப்படும் ஆபத்து உள்ளது. அங்கு பணிபுரியும் 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே எல்விபி வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.எனவே எல்விபி வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும்.அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்