நேர்மைக்கு விழா எடுத்த கவிஞர்

நேர்மை இளைஞருக்கு  வடசென்னையை சேர்ந்த கவிஞர் பாராட்டு விழா நடத்தி  பாராட்டி பரிசளித்தார். இது குறித்து  கவிஞர் ராமலிங்க ஜோதி வெளியிட்ட பதிவு 


நேற்று (21.11.20) திருப்பதி செல்லும் வழியில் திருவள்ளூரில் காலை சிற்றுண்டி "பெரம்பூர் ஸ்ரீநிவாசா உணகத்தில்" சாப்பிட்டேன். 


கார் பார்க்கிங் பகுதியில் காரில் இருந்து இறங்கியபோது இருபதாயிரம் மதிப்புள்ள எனது சாம்சங் கைபேசியை தவறவிட்டேன்.


சிற்றுண்டி முடித்தபோது என்கைபேசி நினைவு வந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லைஅழைப்பு கொடுத்தால் மணி அடிக்கிறது. ஆனால் எவரும் எடுத்து ஆன் செய்தபாடில்லை.


பலமுறை அழைப்பு விடுத்தேன். மணியடிக்கிறது எவரும் எடுத்து ஆன் செய்து பேசவில்லை.


அன்று மாலை கடைசியில் ஒருமுறை அழைத்து பார்ப்போம். மீண்டும் எவரும் எடுத்து பேசாவிடில் காவல்துறையில் புகார் செய்ய முடிவெடுத்தேன்.


ஆச்சரியம். ஜித்தேந்திரா என்ற இளைஞன் எடுத்துப் பேசினான்அவன் திருவள்ளூர் சென்னை சில்க்ஸ்ல் பணிபுரிவதாகவும், பக்கத்தில் உள்ள கார் பார்க்கிங் ஏரியாவில் கண்டெடுத்ததாகவும்,அலுவலகத்திற்கு நேரமானதால், அலுவலகத்தில் கைபேசி அனுமதி இல்லை என்பதாலும், கப்போர்டில் கைபேசியை வைத்துவிட்டு சென்றதாகவும், 


மாலை என் அழைப்பை எடுத்ததாகவும் தெரிவித்தார்.  


 


இன்று காலை அங்கு சென்று சென்னை சில்க்ஸ் ஊழியர்முன் அந்த தம்பி ஜித்தேந்திராவைப் பாராட்டி சால்வை அணிவித்து, கைகடிகாரம் ஒன்றும், திருக்குறள் புத்தகம் ஒன்றும் வழங்கி என் கைபேசியை பெற்றேன்.


 


திருவள்ளூரில் உள்ள "சென்னை சில்க்ஸ்" மேலாளர் பாலமுருகன் என்னிடம்,"இந்த தம்பி ஜித்தேந்திராவின் இந்த நேர்மையைப் பாராட்டி, எங்கள் மேனேஜிங் டைரக்ட்டரும் சென்னை சில்க்ஸ் சார்பில் மேலும் பாராட்டி கௌரவிப்பார்" என்று சொன்னபோது ஆனந்த கண்ணீரில் நின்றேன்.


 


"சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால், சத்தியம் உங்களை காத்து நிற்கும்"  


 


நீங்களும் 8179355315 என்ற எண்ணில் ஜித்தேந்திரா இளைஞனை அழைத்து பாராட்டுங்களேன்.


 


ஒரு ஆயிரம் பேர் பாராட்டி அந்த நேர்மை இளைஞனை திக்கு முக்காடு செய்யுங்கள். என்று கவிஞர் ராமலிங்க ஜோதி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்