நிருபருக்கு முதல்வர் குட்டு


கேட்கும் கேள்வியை  சரியான முறையில் கேட்க வேண்டும் என்று செய்தியாளருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குட்டு வைத்தார்


முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


கேள்வி: 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறுமா?


பதில்: இப்போதைக்கு சொல்ல முடியாது.


கேள்வி: நீட் தேர்வில் தமிழக அரசின் கோரிக்கைநிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் 7.5 சதவிகிதம் என்று பெருமைபேசுகிறீர்கள்....


பதில்: பெருமையாக பேசவில்லை. பெருமை பேசுகிறோமென்று தவறாகப் பேசக்கூடாது.


7.5 சதவிகிதம் ஒதுக்கீடு குறித்தும், நீட் தேர்வு வருவதற்கு முன்புஅரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் எவ்வளவு மாணவர்கள் மருத்துவக்கல்லூரிக்குச் சென்றார்கள் என்பது குறித்தும் உங்களுக்குத் தெரியுமா?


எனவே, நிருபராக இருக்கக்கூடிய நீங்கள் கேட்கும் கேள்வியை சரியான முறையில்


கேட்க வேண்டும். பெருமை பேசுகிறேன் என்று சொல்ல வேண்டாம்.நான்கிராமத்திலிருந்து வந்தவன். ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்கவேண்டுமென்பதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதை நினைத்துஉண்மையிலேயே நான் பெருமை கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.