விபத்தினால் கையை இழந்த திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கைக்கொடுத்து சாதனை புரிந்த ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார், இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை
டெல்லியில் நடைபெற்ற விழாவில், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மைமாநிலமாக தேர்வுசெய்யப்பட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2015ஆம் ஆண்டு மின்சார விபத்தினால் இரு கைகளையும் இழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த . நாராயணசாமி என்பவருக்கு 07.02.2018 அன்று\சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைகள் மாற்றுஅறுவை சிகிச்சைவெற்றிகரமாக செய்து சாதனை படைத்தது பாராட்டிற்குரியது.இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக\மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.\இச்சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்மூலம் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும்,உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் உயரிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எவ்விதகட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்,,