தமிழகம் வருகிறது ராணுவம்


நிவார் புயலை எதிர்கொள்வதற்காக தமிழகத்திற்கு ராணுவம் வருகை தரவுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  சென்னையில் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் இதன்பின்னர் அவர் அளித்த பேட்டி


 


 தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்ததீவிர நிவர் புயலானது இன்று அதிகாலை காலை 2.30 மணி அளவில் சென்னைக்கு தென்கிழக்கே 370 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், அடுத்த 12 மணி நேரத்தில், மிகத் தீவிர புயலாக மாறி, 25.11.2020 இரவு காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே தமிழ்கம் கடற்கரையை கடக்கக் கூடும் என்றும், புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில், அதிகபட்சம் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பலவலாக இடி மற்றும் மின்னலுடன் 25.11.2020 மற்றும் 26.11.2020 ஆகிய நாட்களில் மழை பெய்யக் கூடும் என்றும், 25.11.2020 அன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுhர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதீத கன மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


புயலின் காரணமாக ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற காரைக்காலைச் சேர்ந்த 22 மீன் பிடி படகுளில் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதில் 21 படகுகள் கோடியக்கரை பகுதிக்கும், 1 படகு தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது.தமிழக கடல் பகுதியில் மீன் பிடி கலங்கள் செல்லாமல் இருப்பதற்கு கடலோர காவல்படை கப்பல்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதிப்பிற்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 18 குழுக்கள் கடலூர் நாகை,விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்


இந்திய இராணுவத்தின் 8 குழுக்கள், இரண்டு பாதுகாப்பு படகுகளுடன் இன்று சென்னை மற்றும் திருச்சிக்கும் வருகை தர உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார் 


 


 


--