வெள்ளத்தில் மிதக்கும் 5 ரூபாய் டாக்டர் வீடு

பிரதமர் மோடி முதல்  பாமர குடிமகன் வரை போற்றி புகழப்பட்ட  ஐந்து ரூபாய் டாக்டர். எஸ்.ஜெய சந்திரன்ஏழை மக்களுக்காக மருத்துவ சேவை செய்த பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெரு  இப்போது மழைவெள்ளத்தில்  மிதக்கிறது.இந்த வீட்டில் தான் டாக் டர் ஜெயச்சந்திரன் விட்டு சென்ற மருத்துவ சேவையை  அவருடைய  துணைவியார்  டாக்டர் வேணி ஜெயச்சந்திரன்,  இளைய மகன் டாக்டர்.ஜெ.சரத் ராஜ் ஆகியோர்  மக்களுக்கான மருத்துவர்களாக மேற்கொண்டு வருகின்றனர்


ஆனால் டாக்டர் ஜெயச்சந்திரன்  குடும்பத்தினரின்  மருத்துவ வசதிகளை பெற முடியாத நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் நோயாளிகள் காலடி எடுத்து வைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் காரணம் டாக்டர் வீட்டை சூழ்ந்திருக்கும் மழை நீர்  கழிவு நீர்



சாக்கடை அடைப்பு .இது குறித்து பலமுறை ஆன்லைன் குறைத்தீர்வு மையத்தில் புகார் தெரிவித்தும்   பலனில்லை  சாக்கடை அடைப்பால் வெங்கடாசலம் தெரு வாசிகளும  பல்வேறு நோய்களால்  அவதிப்பட கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது . இந்த பகுதிமக்கள் அச்ச உணர்வோடு வாழ்ந்து வருகின்றார்கள்..இது குறித்து மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிகள் மற்றும் மக்கள் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் எம் டி தயாளன் வலியுறுத்தியுள்ளார் ஒரு காலத்தில்  நோயாளிகளை வரவேற்று உபசரித்து உரிய சிகிச்சையளித்த 5 ரூபாய் டாக்டர் வீட்டை சுற்றியுள்ள மழைநீரும் கழிவு நீரும் மக்களை விரட்டியடிப்பது வேதனையளிப்பதாக அவர் கூறியுள்ளார்