ஊர் சென்றவர்கள் திரும்ப சிறப்பு பேருந்துகள்


 


தீபாவளி  கொண்டாடத்திற்காக மக்கள் சொந்த ஊர் செல்ல  கடந்த 11,12 மற்றும் 13ம் தேதி வரை  8753 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.3 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.


தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள், திரும்பி வருவதற்காக 8 ஆயிரத்து 26 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இப்பேருந்துகள் கடந்த 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்கள்இயக்கப்படுகிறது நாள்தோறும் 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னைக்கு திரும்பி வருவதற்காக 3,416 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்வதற்காக 4 610சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவித்துள்ளன.  இதை தவிர ஏற்கனவே இயக்கப்படும்  8ஆயிரம் பேருந்துகளை சேர்த்து 16ஆயிரம் பேருந்துகள் மக்கள் சொந்த ஊர் சென்று ஊர் திரும்புவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி கொண்டிருக்கின்றனர். சிறப்பு பேருந்துகள் பெருமளவில் தலைநகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தால் செங்கல்பட்டு காஞ்சிபுரம் தாம்பரம் கோயம்பேடு ஆகிய பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது.