உடைக்கப்பட்ட மகாத்மாவின் வலதுகரம்

திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் அருகே இருக்கிறது பழமை வாய்ந்த சண்முகனார் பூங்கா. இந்த பூங்காவில் உள்ள ஊஞ்சலில் குழந்தைகள் விளையாடும் காட்சி பார்க்கவே பரவசமூட்டும். இந்த ஊஞ்சலில் இப்போது குழந்தைகள் விளையாட முடியாது காரணம் சமூக விரோதிகள் விளையாடியதால் ஊஞ்சல் உடைந்து கிடக்கிறது.அது மட்டுமில்லை இப்போது யாருமே  பூங்காவில்  உட்கார்ந்து உற்சாகமாக பேச முடியாது காரணம் டெங்கு கொசுக்கள் உலா வருவது தான்.பூங்கா என்றால் செடிகொடிகள் பரவலாக இருக்கும்இங்கு பராமரிப்புக்கு சரியான  ஆளில்லாததால் செடிகொடிகள் காய்ந்து கிடக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பூங்காவுக்கு .பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மாகாந்தி சிலையின் வலது கரம் உடைக்கப்பட்டுள்ளது மகாத்மாவின் வலது கை உடைக்கப்பட்டது குறித்து காங்கிரசாரும் கண்டுகொள்ளவில்லை ‌.காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை