50 சதவீத இருக்கைகளுடன் 200 பேருக்கு மிகாமல் உள்ளரங்குகளில் கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
முக்கியமான முடிவுகள் மேற்கொள்வது குறித்து அரசியல் கட்சிகளிடம் கேள்வி எழுப்பினால் பொதுக்குழு - செயற்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகு்ம் . கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு வழியில்லாமல் போனது . அறிவாலயத்தில் திமுக உயர்மட்டக்குழு கூட்டத்திற்கே அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆன்லைனுக்கு மாறினார், இதுவரை ஆன்லைன் கூட்டங்களையே நடத்தி வருகிறார். தேர்தல் பிரசாரத்தையும் ஆன்லைனுக்கு மாற்றி புதிய வரலாற்றை படைத்தார்,
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டது, அதிகளவில் கூட்டம் கூட்டியதற்காக மாநில பாஜ தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இந்த நிலையில் வரும் டிசம்பர் 1 ம்தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக 2 00 பேர் பங்கேற்கும் அரசியல் ., சமுதாய மற்றும் மதம் சம்பந்தப்பட்ட கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என்றும் உள்ளரடங்கங்களில் மட்டுமே நடத்தப்படும் இந்த வகை கூட்டங்களுக்கு மாவட்ட கலைக்டர்கள் அல்லது சென்னை மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் முன் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த அனுமதியும் டிசம்பர் 31 ம்தேதி வரை மட்டுமே நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, வரும் டிசம்பர் 14 ம்தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் நுழையவும் அனுமதிக்கப்படும்
கல்லுாரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள், திறக்கப்படும் என்றும் விடுதிகளும் திறக்கப்படும் என்றும் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம்தேதி முதல் தொடங்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், அதேபோல புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் ,