ஷோ காண்பிக்க இது வடமாநிலம் அல்ல:

 


 மந்திர வாதி போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் என்று ஷோ காண்பிக்க  இது வடமாநிலம் அல்ல இது தமிழ்நாடு என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நெல்லை - தென்காசி ‘மாவட்ட திமுக சார்பில்தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசார சிறப்பு பொதுக்கூட்டத்தில்  திமுக  தலைவர் ஸ்டாலின் காணொளி மூலம்  ஆற்றிய உரை 
கடந்த 22-ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பது போல அவரது பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனை பட்டியல் போடத் தயாரா என்று அமித்ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பா.ஜ. ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.இதை எந்த விழாவில் கேட்கிறார் என்றால் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் தொடக்கவிழாவில்தான் கேட்கிறார் அமித்ஷா. ஐயோ பாவம். அவருக்காகப் பரிதாபப்படுகிறேன். மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் தான். 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்து 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான்.


எழுபது ஆண்டு இயக்கம் இது! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த இயக்கம் இது. ஒரு முறையல்ல, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் இது. தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் இது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இது.அது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, தி.மு.க. தொண்டனாக அமித்ஷாவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன
அதேபோல் அமித்ஷா இன்னொரு குற்றச்சாட்டையையும் வைத்துள்ளார். 'வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் வாரிசு அரசியலுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்' என்று பேசி இருக்கிறார். அவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை?மகனை எப்படியாவது மத்திய மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டு இருப்பவர் பன்னீர்செல்வம்தான். அவருக்குத்தான் அமித்ஷா பதில் சொல்கிறாரா?வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அமைச்சர் அமித்ஷாவுக்கோ பா.ஜ.க.வுக்கோ அருகதை இல்லை. வாரிசுகளால் நிரம்பி வழியும் கட்சிதான் பா.ஜ.க. என்று இந்தியா முழுவதும்  பாஜவினரின் வாரிசுகளை அவர் பட்டியலிட்டார்,