மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ஆகியோ ர் சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசினர்அதன்பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி
3 வேளாண் தொடர்பான சட்டங்களை திரும்ப பெற வேண்டும்,தொழிலாளர் நலச்சட்டங்களை சுருக்கி, 4 சட்டங்களாக மாற்றியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பும் நவ.26ந் தேதி பொதுவேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.அந்தபோராட்டத்தை திமுக கூட்டணி ஆதரிக் வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார் அவர்
மேலும் தடையை மீறி பாஜக யாத்திரை நடத்துவது சரியல்ல என்றும் வழியெங்கும் வன்முறையை தூண்டி தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற பாஜக மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு ராமகிருஷ்ணன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தார்