தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ஜெயகுமார்

ராயபுரத்தில் கறுப்புக்கும் சிவப்புக்கும் இடமில்லை என்று திமுகவை சூசகமாக தாக்கி அமைச்சர் ஜெயகுமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்


சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்,மொகல் ஒட்டல் ஒன்றை திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி


ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை 1991ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எந்தவொரு வளர்ச்சியும் இல்லை.இங்குள்ள  காசிமேட்டுக்கு அழைத்தால் தென்சென்னை ஆட்டோக்கள் வரவே அஞ்சுவார்கள்.அந்தளவுக்கு சமூக விரோதிகள் அதிகமாக இருந்தது.ஜெயலலிதா  ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் தமிழகம்  அமைதிப் பூங்காவாக மாறியது. மாநிலம் முழுவதும்  ஏற்பட்ட மாற்றத்தால் ராயபுரம் மக்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கப்பட்டது அதே போல் ராயபுரத்தில் சமூகவிரோதிகள் ஒடுக்கப்பட்டு எந்தவிதமான பிரச்னையும் இல்லாத பகுதியாக திகழ்ந்து வருகிறது


ராயபுரம் தொகுதி ஒரு குட்டி இந்தியாவாக வும் குட்டி தமிழகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு ஜம்மு காஷ்மீர் உத்தரபிரதேசம் ,குஜராத்,ஒரிசா,ஆந்திரா ,கேரளா,கர்நாடகம் ,பஞ்சாப் ஆகிய மாநில மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.அதே போல தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு குடியேறி சகோதர மனப்பான்மையுடன்பழகி வருகின்றனர்.


இங்கு தான் தமிழ்நாட்டிலேயே அதிகமான அளவில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.இந்த பள்ளி க்கூடங்களில் கிட்டதட்ட 50 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.


ராயபுரத்தில் தேவாலயங்கள் மசூதிகள் இந்து கோவில்கள் அதிகமாக இருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் சென்னை துறைமுகத்தில் இருந்து இரும்புத்துகளும் நிலக்கரியும் இறக்குமதி செய்யப்பட்டது. இரும்பு துகள்களை கையாளும் போது இங்குள்ள  பகுதிகளில் பரவி மக்கள் சிவப்பாகி விடுவார்கள். நிலக்கரியை கையாளும்போது இங்குள்ள  வீடுகளுக்கு  தூசியாக பறந்து அதன்மூலம் மக்கள் கருப்பாகி விடுவார்கள்.இப்போது அவை தென் பகுதிக்கும் வடபகுதிக்கும் போய்விட்டன.எனவே ராயபுரத்தில் கறுப்புக்கும் சிவப்புக்கும் இடமில்லாமல் போய்விட்டது. இதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்  மேலும் ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் ஒருகாலத்தில் ஆள்நடமாட்டமே இருக்காது. ஒரு ஓட்டல் கூட இருக்காது.இப்போது இந்த தெருவே பாரீன் மாதிரியாகி விட்டது. நிறைய ஓட்டல்கள் இங்கு  உணவு வகைகளை பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். அந்த மகுடத்தில் வைரக்கல் பதிக்கப்பட்டது போல மொகல் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரமான தரமான சுவையான பிரியாணி மற்றும் அசைவ உணவு வகைகளை வழங்கப்பட இருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்


இந்தநிகழ்ச்சியில்  பஞ்சாப்  ஸ்டைலில் அமைச்சர் ஜெயகுமார் டர்பன் அணிந்து கலக்கியது,பார்வையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.முன்னதாக அமைச்சர் ஜெயகுமாரை அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய பொது செயலாளர் எம்.இ.ராஜா செயல் தலைவர் நாஞ்சில் ரவி ,மாநிலத்தலைவி ஆர்.சீதா,மாநிலத்துணைத்தலைவர் அமரன் தணிகை மலை ,காஞ்சனா உள்ளிட்டோர் வரவேற்றனர்