தமிழகத்திற்கு கூடுதலாக 400எம்பிபிஎஸ் சீட்
வருத்தமில்லாவாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தவசி தற்போது அண்ணாத்தே படத்திற்கும் புக்காகி இருக்கிறார் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார் . அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் , சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் உதவி வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினரும் டாக்டருமான சரவணன் நடிகர் தவசிக்கு இலவசமாக சிகிச்சையளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஜோபிடனுடன் மோடி பேச்சு
அமெரிக்காவின்புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி டெலிபோன் மூலமாக பேசினார். அமெரிக்காவுடனான நட்புறவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்த சூழலியல் மாற்றங்கள் குறித்தும் கொரோனா நோய் பரவல் குறித்தும் ஜோபிடனுடன் மோடி முதற்கட்ட பேச்சு நடத்தினார்.
அப்போது புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் பிடனுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரீஸ்க்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிக்க உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது
தமிழகத்திற்கு கூடுதலாக
400 எம்பிபிஎஸ்சீட்
இந்த கல்வியாண்டில் தமிழகத்திற்கு 400 எம்பிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.சென்னையில் பனிமலர் மருத்துவக்கல்லூரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு 300 சீட்டுகளும் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கு தலா 50 மருத்துவ இடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.அதே சமயத்தில் முத்துக்குமரன் மருத்துவக்கல்லூரி தாகூர் மருத்துவக்கல்லூரி ஆகியவை இந்த ஆண்டு கலந்தாய்வில் இடம் பெறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
தலைமை ஆசிரியைக்கு 50ஆயிரம் அபராதம்
மதுராந்தகம்புலியரண்கோட்டை பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு மனித உரிமை ஆணையம் ரூ 50ஆயிரம் விதித்துள்ளது. தனது பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அடித்து சித்ரவதை செய்ததற்காக தலைமை ஆசிரியைக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி வதந்தி அமைச்சர் உதயகுமார் மறுப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியிருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் ஏரி திறக்கப்படலாம் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.இதனை மறுத்துள்ள வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்,ஏரி நிரம்பினாலும் குறைந்த அளவு நீரே வெளியேற்றப்படும் என்றும் செம்பரம்பாக்கம் ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கூறினார். செம்பரம்பாக்கம் ஏரியில் 2.9 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது என்றும் அவர் கூறினார்.