மிதக்கும் கலைஞர் வீடு
கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கொட்டும் மழையால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கோபாலபுரம் வீடு மிதக்கிறது,
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது, நேற்று 740 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது, நாளை பிற்பகல் 1 மணிக்கு புயல் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், என்றும் கனமழையை விட அதீத கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ரயில் பஸ் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது, இம் மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது,சூழ்நிலையை பொறுத்து விடுமுறை மேலும் நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், ,
கழிவு நீரால் சூழப்பட்ட ராயபுரம் தெருக்கள் இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தலைநகரத்தின் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன , சென்னையில் மையப்பகுதியாக விளங்கும் பாரிமுனை உள்ளிட்ட பகுதிகள் மழை நீர் தத்தளித்துக்கொண்டிருக்கிறது, அதே போல் ராயப்பேட்டை,யின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேசமாக மாறியிருக்கிறது, சென்னையின் புகழ்பெற்ற மகளிர் கல்லுாரியாக விளங்கும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி கோபாலபுரத்தின் அடையாளமாக விளங்கும் கலைஞர் வீடு ஆகியவையும் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன, அந்த பகுதிகளில் வசிக்கும் பணக்கார குடும்பங்கள் மிதக்கும் நீரை கடந்து செல்வது எப்படி என்று தீவிர யோசனையில் இறங்கியுள்ளனர், இது ஒரு புறம் இருக்க மாநகரத்தின் பல்வேறு தெருக்கள் மழை நீரோடு சேர்ந்து கழிவு நீர் சூழ்ந்து மக்கள் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாக்கியிருக்கிறது, புயலின் முன்னோட்டம் போல் சென்னை காசிமேடு அடையாறு கடலில் அலைகளின் சீற்றம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,