ஜாபர் சேட் மாற்றம்

 பள்ளிகளை திறக்க எதிர்ப்பு


வரும் 16ம்தேதி பள்ளி கல்லூரிகளை திறக்க திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் கொரோனாவின் இன்னொரு அலை அடிக்கும் என்று சொல்லப்படும் நிலையில் 2021ஆம்ஆண்டு ஜனவரி மாதம் வல்லுனர்களுடன்ஆய்வு மேற்கொண்டு பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என்று என்று தமிழக அரசுக்கு ஸ்டாலின் ஆலோசனை தெரிவித்துள்ளார் 



டிஜிபி ஜாபர் சேட் மாற்றம் பொதுவிநியோகத்துறை டிஜிபி ஜாபர் சேட் , தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு இயக்குனர் மற்றும் டிஜிபி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்


ரயில்வேடிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபுவுக்கு  பொது விநியோக பிரிவு டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது 


காத்திருப்பு பட்டியலில் இருந்த  டிஐஜி துரைக்குமார், நிர்வாகப் பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


எம்பிபிஎஸ் கவுன்சிலிங் விண்ணப்பம


எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 12ம்தேதி வரை வழங்கப்படும் என்றும் வரும் 16ம்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான  விண்ணப்பங்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedical  selection.org என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம் என்றும் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்துறையில் மாற்றம்


ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் நாகராஜ முருகன் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள சாந்திக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது