திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம்


திருப்பங்கள் நிறைந்த  அரசியலில் அடிக்கடி தலைவர்கள் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து திருப்தியை தேடிக்கொள்கின்றனர்.  இன்று காலை திருப்பதி திருமலையில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது துணைவியாருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். திருப்பதிக்கு வந்த தமிழக முதலமைச்சரை தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர். திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் இன்றும் ஆன்மீக மணம் பரப்பி வருகிறது. முதலமைச்சரின் பயணம் அவருக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கு நல்லதோர் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது ஆர்வமும் ஆசையுமாகும்.