மதுரை தெற்குவாசல் அருகே திடீர் தீ விபத்தில் தீயணைப்பு படைவீரர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரை தெற்குவாசல் விளக்குத்தூண் அருகே உள்ள பிரபல ஜவுளிக்கடையின் எதிரே உள்ள ஓர் கட்டடத்தில் நள்ளிரவில் தீ பற்றியுள்ளது. இது குறித்து தகவல்கள் அறிந்து மதுரை பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
தீயை அணைக்க முயன்றபோது, அருகிலிருந்து பழைய கட்டடத்தில் திடீரென ஏற்பட்ட விரிசல் காரணமாக, இடிந்து விழுந்தது. அப்போது தீயை அணைக்கும் பணியிலிருந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மதுரை நகர் தீயணைப்பு நிலையம் மற்றும் மீனாட்சி கோவில் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), சிவராஜன் (32) ஆகியோர் வீரமரணம் வீரர்களாவர்
உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சம் நிவாரண உதவியும் குடும்பத்தில் தகுதி மிக்க ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்றும் அவர்அறிவித்துள்ளார் இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஓவெளியிட்ட அறிக்கை யொன்றில்உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 1கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்