அமைச்சர் கே.பி.அன்பழகனிடம்
வேளாண் துறை
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஒரிரு வாரங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவில் காலமானார்.அவருக்கு வயது 72 கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை காவிரி படுகை மாவடடத்தின் பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றவர்.கடந்த 2016ஆம்ஆண்டு முதன்முறையாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் வேளாண் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் அனைவரிடமும் விருப்பு வெறுப்பின்றி பழகும் பண்பாளர் அமைச்சர் துரைக்கண்ணு அவரது மறைவு அவர்தம் குடும்பத்திற்கு மட்டுமின்றி அதிமுக தொண்டர்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதும் மானிய கோரிக்கை களின்போது பதிலளிக்கும் போதும் அவை மரபுகளை கடைபிடிக்கும் அமைச்சர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை யை கடைபிடிக்க வேண்டும் சுய பாதுகாப்பை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்
இதற்கிடையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியை வந்தடைந்து.அங்கு அவரது இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அமைச்சரவையில் மிக முக்கிய இலாகாவான வேளாண் துறை யாருக்கு வழங்கப்படும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. வேளாண் துறை அமைச்சர் பொறுப்பு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜுடம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.ஆனால் வேளாண் அமைச்சர் பொறுப்பு ,வடமாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம் அல்லது எம்.சி.சம்பத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் அல்லது சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியனிடம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
டெய்ல்பீஸ் சற்றுமுன் கிடைத்த தகவல்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை அடிப்படையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பித்துள்ளார்