கேரள ஸ்டைல் சட்டம் ஸ்டாலின் கோரிக்கை


காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, கேரளா அரசு போல் “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று முதல்வர் இபிஎஸ்க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்


இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.


சமீபத்தில்வரவேற்கத்தக்கச் சட்டம் ஒன்றை - இந்தியாவிலேயே முதல் முறையாகக் கொண்டு வந்து - காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயித்துள்ளது. 16 வகை காய்கறிகளுக்கு விவசாயிகளின் உற்பத்தி விலையில் இருந்து 20 சதவீதம் அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் - இந்த காய்கறிகளின் சந்தை விலை குறைவாக இருந்தால் கூட இந்த அடிப்படை விலை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டத்தில் உறுதி செய்திருக்கிறது. விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றும் அந்தச் சட்டம் தமிழ்நாட்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியோ விவசாயிகள் பற்றியும் கவலைப்படவில்லை; கேரள அரசு கொண்டு வந்தது போன்றோ, பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது போன்றோ எந்த விதமான “விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்களையும்” கொண்டு வரத் துணிச்சல் இல்லை. 


ஊழல் டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துவதைக் கைவிட்டு- காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி - கேரளா அரசு போல் “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


இவ்வாறு ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்