அப்பா கட்சியில் சேர்ந்தால் ..விஜய் எச்சரிக்கை

இளையதளபதி என்று திரையுலகில் உச்சிமோந்து அழைக்கப்படும் நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்க போகிறார்.விஜய் மக்கள் மன்றம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் செய்திகள் பரவின. இச்செய்தி களுக்கு நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் அகமது டுவிட்டர் மூலமாக மறுப்பு தெரிவித்தார்


அதோடு பிரச்னை முடிவுக்கு வந்தது என்று தான் பலரும் நினைத்திருந்தார்கள்.ஆனால் எதிர்பார்தததற்கு மாறாக ஹீரோவே சீனுக்கு வந்தார். நான் அவனில்லை என்பதற்கு பதிலாக தனது அப்பா எஸ்ஏ சந்திர சேகர் தொடங்கியிருக்கும் கட்சிக்கும் தனக்கும்சம்பந்தமில்லை என்றும் தந்தையின் கட்சியில் சேர்ந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் அறிவித்துள்ளார்.அரசியலில் நிரந்தரநண்பனும் எதிரியும் இல்லை என்பார்கள்.இப்போது அப்பாக்களும் எதிரிகள் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது.திரையுலகம் நிமிடத்திற்கு நிமிடம் புது புது ஷாட்டுகள் வைத்து கொண்டிருக்கிறது அடுத்த ஷாட்டு என்ன என்று தான் யாருக்கும் தெரியவில்லை


 


 


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியானது.  விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது.  கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் இந்த கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.


 


துபற்றி, நடிகர் விஜயின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறும்பொழுது, விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது.  நடிகர் விஜய் எதிர்காலத்தில் இந்த கட்சியில் இணைவாரா என்பது பற்றி அவரிடமே நீங்கள் கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.