இ-பாஸ் இல்லாமல் திருப்பதிக்கு போகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
இது குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணை மத்திய
அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் 15.4.2020 முதல் வெளி மாநிலங்களுக்குஇடையேயான பேருந்து, லாரி உள்ளிட்ட போக்குவரத்துகள் தடை
செய்யப்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, தற்போதுஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கின்போது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவைகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அரசின்முன்அனுமதியுடன் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போக்குவரத்துஅனுமதிக்கப்பட்டது .அக்டோபர் 31ஆம் தேதி முதல் இ-பாஸ் இல்லாமல்புதுச்சேரிக்கும், நவம்பர் 16ஆம் தேதி முதல் கர்நாடகா மாநிலத்துக்கும்பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், ஆந்திரா முதலமைச்சர் இரு
மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு, ஆந்திரா இடையே நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவை இபாஸ் இல்லாமல்இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் எந்த தடையும் இன்றி இ பாஸ் இன்றி திருப்பதி செல்லலாம்.என்பது குறிப்பிடத்தக்கது.