வடசென்னை காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ, பரபரப்பான பாலிடிக்ஸ்க்கு பேர் பெற்ற வடசென்னையில் பவர் புல் காங்கிரஸ் பிரமுகராக இருந்த மனோ , திடீரென அரசியலில் இருந்து சற்று இளைப்பாறுதலாக ஓய்வெடுத்து கொள்ள விரும்புவதாக அறிவித்தார், அவர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில் இணைவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர், திமுகவில் மாவட்ட செயலாளர் பதவியெல்லாம் அவருக்காக காத்திருப்பதாக ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்பட்டது, 6 மாதமாக திமுகவில் இருந்து அழைப்பு வரும் என்று அவர் காத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ராயபுரம் மனோ திடீரென அரசியல் ஓய்வு முடிவை வாபஸ் பெற்று அதிமுகவில் இணைந்தார், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அவர் கட்சியில் இணைந்தார், தங்களது கட்சியில் சேர முயற்சித்த ராயபுரம் மனோவை அதிமுக ஹைஜாக் செய்தது எப்படி என்பது குறித்து திமுகவில் பெரும் சஸ்பென்ஸ் நிலவுகிறது.,ராயபுரம் மனோ ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு முறையும் ராயபுரத்தில் இருமுறையும் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் ராகுல்காந்தியால் அறிமுகப்படுத்த காங்கிரஸ் வேட்பாளர்களில் ராயபுரம் மனோவும் குறிப்பிடத்தக்கவர், ,
ராயபுரம் மனோவுடன் முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணன், ரூப் சந்தர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பகுதி தலைவர்கள் பி.பாலு,வி.கே.ராஜ், டி.எஸ்.தங்கேஸ்வரன் ஜெ.பாபு ,ஜனார்த்தனம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அதிமுகவில் சேர்ந்தனர்,