முதல்வருடன் மு.க.ஸ்டாலின் போட்டா போட்டி


தனியார் மருத்துவக் கல்லூரியில் 7.5 ;சதவீத ஓதுக்கீட்டில் சேர்ந்த  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும்"என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்,


இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பு.


நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க அரசை,  மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்.


அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.க, இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார் \


இதற்கிடையில்  ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிவிப்பை அதிமுக கிண்டல் அடித்துள்ளது, இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையையே சுட்டிக்காட்டி  அரசு பள்ளிகளில் இருந்து மருத்துவம்  படிக்கும் மாணவர்களின் ஏழ்மை நிலை கருதி அவர்களது கல்விக்கட்டணததை வழங்குவதற்காக  போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த  உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார், மேலும் , மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ளஅனைத்து அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை உதவித்தொகை  அனுமதி வரும் வரை காத்திராமல்,உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒருசுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என்றும் கூறியுள்ளார், மாணவர்களின் நலனுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு உஅதிமுக - திமுக போட்டி போட்டு உதவுவது ஒரு வகையில் ஆரோக்கிய அரசியலே என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர், 


 


 


 


--