நிவர் புயல் காரணமாக சென்னை கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.பயிர்கள் பாதிக்கப்பட்டன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்து மீட் பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இரண்டாம் கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் இன்று பகல் 12 மணிக்கு சென்னை கீரின்படவேஸ் ரோட்டில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்படும் முதலமைச்சர்., பள்ளிக்கரணை துரைப்பாக்கம் ஒக்கியம் மேடு கிழக்கு கடற்கரை சாலை செம்மஞ்சேரி நூக்கம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வூ செய்கிறார் அவருடன் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் உடன் செல்கின்றனர்
புயல் பாதிப்பு பகுதிகளில் முதல்வர் இன்று நேரில் ஆய்வு