புதுபடங்களே இல்லாத தீபாவளி

எந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட்டம் இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகள் வெடிக்க முடியாத வறுமை மிகுந்த தீபாவளியாக மாறி விட்டது.இதற்கிடையில் காற்று மாசு கருதி புதுடெல்லியில் வரும் 9ம்தேதி முதல் நவம்பர் 30ம்தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. நாட்டின் தலைநகரில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற நகரங்களிலும் இந்த தடைநீட்டிக்கப்படுமா என்று அஞ்சிய நிலையில் அதை அந்த மாநிலங்களின் ஆணையங்கள் முடிவெடுத்து கொள்ளலாம் என்று கூறியிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.இது ஒருபக்கமிருக்க தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வரலாற்றிலேயே இல்லாத சோகமாக இந்த தீபாவளி அமைந்துள்ளது. இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கனவேசூரியாவின் சூரரை  போற்று ஒடிடியில் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய்யின் மாஸ்டர் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் தீபாவளிக்கு வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 


வேகம் குறைகிறது


கொரோனா


சென்னையில் கொரோனா நோய்த்தொற்று டாப் கியரில் சென்று கொண்டிருந்த ராயபுரம் மண்டலத்தில் வெகுவேகமாக குறைந்து கொண்டிருக்கிறது.தற்போது ராயபுரம்தேனாம்பேட்டை மற்றும் தண்டையார் பேட்டை மண்டலங்களில் ஒரு சதவீதம் நேரே  நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்தற்போது அண்ணா நகர் மண்டலத்தில் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 435 என்ற அளவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வடசென்னையில் அதிகாரிகளின் வேகத்தை பாராட்டலாம்.