எப்போதும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு மகிழ்ச்சி மத்தாப்பை ஒளிரச்செய்யும் மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் ஜெயகுமார். ஏதாவது வித்தியாசமான ஒன்றை செய்து காட்டுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
சமீபத்தில் புதிய வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தில் தொப்பி, கண்ணாடி, கலர் சட்டை என அவர் எடுத்த செல்பி வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை பார்த்து அமைச்சர் ஜெயக்குமார் சினிமாவில் நடிக்கப் போகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் இது குறித்து அவரிடம் கேட்டபோது," ஒரு ஜாலிக்காக நானே எடுத்துக் கொண்ட புகைப்படம் காலேஜ்ல படிக்கிற ஞாபகம் வந்ததால இந்த செல்பி எடுக்கணும் தோணுச்சு அதனால எடுத்தேன்" என்கிறார்.