புதிய காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை

வரும் 29 ம்தேதி தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்


சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி


வரும் 29 ம்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது அது குறித்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நமக்கு  நல்ல மழை பொழிவு  இருக்கும். அந்த வகையில் எதிர்வரக்கூடிய காலங்களில் புதிதாக உருவாக  கூடிய காற்றழுத்த தாழ்வுநிலைகளை தொடர்ந்து கண்காணிக்க தேவையான அனுபவத்தையும் பயிற்சி களையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்


அதற்கான கட்டமைப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கி தந்துள்ளார். ஆகவே 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.


கடந்த காலங்களில் புயல் உருவானதால் அது கடந்த சென்ற பிறகு தான் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம ஆனால் இப்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது அதனால். புயல் மழையால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் குறைந்திருக்கின்றன. சேதங்களும் வீழ்ந்திருக்கின்றன என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்