தைப்பொங்கல் திருநாளில் பிரசாரம் துவக்கம்

 


தைப்பொங்கல் திருநாளில்  பிரசாரத்தை துவக்க இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்


அவர் தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் என்ற பெயரில் எழுதியுள்ள கடிதம்


கோட்டையில் கழகத்தின் ஆட்சி நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், மக்களின் மனக்கோட்டையில், என்றென்றும் ஆண்டு கொண்டிருப்பது தி.மு.கழகம்தான். தமிழகத்தை வஞ்சித்தோருக்கு  2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள். அந்த நம்பிக்கையுடன் நாம் கவனமாகக் களப்பணியாற்றுவோம்; நாள்தோறும் நம் மக்களைச் சந்திப்போம். அவர்களின் மனங்களை வெல்வோம். 


நம் உயிர் நிகர் தலைவர் கட்டிக்காத்த இயக்கத்தை ஆட்சியில் அமரவைத்து, அதனைக் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை, நமக்கு ஓய்வில்லை. காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடிவரும் உங்களில் ஒருவனான நானும், தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாகப் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறேன்.


மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும் அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்!


 


 


 


--