வாரி வழங்கிய அமைச்சர்கள் அமைச்சர்
உற்சாகம்பொங்கி வழியும் தொண்டர்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அதிமுகவினருக்கு ஆயிரம் ரூபாய் பணமும் அரிசி மூட்டையும் வழங்கியதால் உற்சாகமடைந்தனர்
மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகத்துறை அமைச்சர் ஜெயகுமார் இந்த ஆண்டு உற்சாகம் மிகுந்த ஆண்டாக அமைந்துள்ளது.அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் என்று பதவிகள் குவிந்ததால் உற்சாகம் அடைந்துள்ளார் இதன்காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனது சொந்த தொகுதியான ராயபுரத்தில் உள்ள அதிமுகவினருக்கு தலா ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு மூட்டை அரிசியும் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 16ஆயிரம் அதிமுகவினருக்கு பரிசு மழை பொழிந்துள்ளார்.தன்னை தேடி திருத்தங்கல் இல்லத்திற்கு வந்தவர்களுக்கு வேட்டி சேலை ஸ்வீட் பாக்ஸ் தோல் பை வெகுமதி என்று வாரிவழங்கியுள்ளார். இதனால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர் அடுத்த தீபாவளியின் போதும் ஒரு தேர்தல் வரவேண்டும் என்று குல தெய்வங்களை வேண்ட தொடங்கியுள்ளனர்