வரும் நவம்பர் மாதம் 6ம்தேதி முதல் டிசம்பர் 6ம்தேதி வரை தமிழக பாஜக நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கலவர நோக்கத்துடன் பாஜக நடத்த உள்ள யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த யாத்திரையை தடை செய்ய தேவையில்லை என்றும் அதற்கு மக்கள் மத்தியில் எந்த வரவேற்பும் இருக்காது என்று தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தமிழகத்தில் கர்ணம் அடித்தாலும் பாஜக காலடி வைக்கமுடியாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில்கொரோனா பரவல் காரணமாக வேல்யாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்திசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேல் யாத்திரை குறித்து வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்)பதிவு வருமாறு
தமிழ்க்கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாஜக , தமிழை தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்
இதற்கிடையில் தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகன் என்று விளித்திருப்பதன் மூலம் முருகனை பகுத்தறிவு வாதியான கனிமொழியும் தமிழ் கடவுளாக ஏற்றுக்கொண்டாரோ என்ற கேள்விஎழுந்துள்ளது