சூர்யாவின் சூரரை போற்று, லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவின் முக்குத்தி அம்மன் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் ரம்யா கிருஷ்ணனின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான குயின் ஆகிய படங்கள் ஏற்கனவே ஓ.டி.டி. தளத்தில் ஓகோ என்று வெற்றி பெற்று விட்டன. இந்த நிலையில் விஜயின் மாஸ்டர் எப்ப வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர், தியேட்டரில் தான் வரும் என்று அடித்து சொல்லிக்கொண்டிருந்த நிலையில் இல்ல: இல்ல ஓ.டி.டியில் தான் என்று திடீர் செய்திகள் சில நாட்களாக திணறடித்துக்கொண்டிருந்தன, தியேட்டரில் தான் வரவில்லை. ஓடிடி தளத்திலாவது வரட்டும் என்று ரசிகர்களும் மனம் மாறிக்கொண்டிருந்த வேளையில் மாஸ்டர் தயாரிப்பு குருப்பிலிருந்து தியேட்டர் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது தான் மாஸ்டர் வரும் என்று அடித்து சொல்லியிருக்கிறார்கள்,
இடையில் ஓடிடியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள், தியேட்டர்கள் இப்போது சோகத்தில் இருக்கின்றன, நஷ்டத்தில் இருக்கின்றன, நம்பியிருக்கும் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள்,அனைத்து தியேட்டர்களும் பிரச்னையில் இருந்து மீளட்டும் . மீண்டும் திறக்கப்படும் வரை தியேட்டரில் தான் மாஸ்டர் அதுவரை வருவது வதந்திகளை தான் அதை நம்பாதீர் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கப்பட்டுள்ளது,
அண்மையில் தளபதி விஜய் நற்பணி மன்றம் அரசியல் கட்சியாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய போவதாக பெரும் சர்ச்சை எழுந்தததும் அதை தொடர்ந்து அந்த கட்சியின் நிர்வாகிகள் ராஜினாமா முடிவுக்கு போனதும் தெரிந்த கதை, இந்த நிலையில் மாஸ்டர் வெளிவருமா அதில் அரசியல் நெடி இருக்குமா என்று சினிமா வட்டாரங்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றன, மாஸ்டர் வரும் வரை காத்திருங்கள், பொறுமை பொறுமை பொறுத்திருப்போம், அதுவரை தனித்திருப்போம், படம் வரும் வரை நமக்கும் ஓ.டி.டி தளத்திற்கும் இடைவெளி அவசியம் என்பது போல் அறிக்கை வர பொறுமையின் எல்லைக்கே போய் விட்டார்கள் விஜய் ரசிகர்கள் . அனேகமாக மாஸ்டர் பொங்கலுக்கு தான் வருவார் போல தெரிகின்றது.எல்லா மாஸ்டர்களும் ஆன்லைன்ல தான் வருவோம்னு துடிக்கும்போது இவர் மட்டும் ஏன் என் வழியே வேற என்கிறார் .
விஜய் வழியில் யாரும் குறுக்கிடமுடியாது: யாரையும் நம்பலாம் மாஸ்டரை நம்பவே முடியாது: மாஸ்டரை பற்றி வதந்திகளை நம்பவே நம்பாதீங்க என்று எஸ்.ஏ.சந்திரசேகர் மைன்ட் வாய்ஸ் சொல்வது சொல்வது புரிகிறது,