தினகரன் கட்சியுடனான கூட்டணிக்கு குட் பை சொல்ல இந்திய தேசிய லீக் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது
இந்திய தேசிய லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூம் மூலம் நடைபெற்றது, . இந்த கூட்டத்தில் அதன் மாநிலத்தலைவர் முனிருதீன் ,ஷெரீப் தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் ஜகீருதின் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் டிசம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற உள்ள இந்திய தேசிய லீக்கின் தேசிய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது, இந்த கூட்டணியில் கட்சியின் சட்டமன்ற கூட்டணி பற்றி மாவட்ட நிர்வாகிகளிடம் விவாதிக்கப்படுகிறது, கட்சியின் கட்சியின் வளர்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்ப்பு வாக்குசாவடி முகவர்கள் கமிட்டி, ஆகியவை குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறது, இதைத்தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவான முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர் .
தற்போது இந்திய தேசிய லீக் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கூட்டணியில் உள்ளது, வரும் சட்டமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம், என்பது குறித்தும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி சேரலாமா என்பது குறித்து ஜூம் கூட்டத்தில் தேசிய லீக் கட்சியினர் தீவிர ஆலோசனை நடத்தினர், பாஜக இல்லாத கூட்டணிக்கு ஆதரவளிக்கலாம் என்று முதற்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன, அடுத்த கட்டமாக தினகரன் கட்சிக்கு குட்பை சொல்வது குறித்து முடிவான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது,